பரிகார ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்பவர்கள் நம் முன்னோர்கள் செய்த முறையில் செய்யும் போது தான் அதற்கான பலன்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
பரிகாரம் செய்யும் பொருட்டு குருஸ்தலம் செல்பவர்கள் முதலில் தரிசிக்க வேண்டியது அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் உள்ள அருள்மிகு அபய வரதராஜ பெருமாளை. அவருக்கு அர்ச்சனை செய்து நீங்கள் செய்ய வந்துள்ள பரிகாரம் நல்லபடி நிறைவேறி உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டிக் கொள்ள வேண்டும். பின்பு அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரரையும், அம்பாளையும் தரிசித்து மேலே சொன்னபடி வேண்டி அர்ச்சனை செய்து விட்டு குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்ய வேண்டும் .
பரிகாரம் முடிந்த பிறகு ஆலங்குடி பஸ் நிறுத்தப்படும் இடத்திலிருந்து நடந்து செல்லும் து]ரத்தில் உள்ள திருவோணமங்களம் என்ற இடத்தில் சாலை ஓரமாக (கும்பகோணம் செல்லும் சாலை) அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் சந்நிதியில் வழிபாடு செய்து பரிகாரத்தை முடிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் அம்மனுக்கு அபிஷேகமும் செய்து பொங்கலிட்டு படைத்து பரிகாரத்தை முடிக்கலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து முடிக்கலாம் .
No comments:
Post a Comment